கோப்புப்படம் 
விளையாட்டு

ஏப்ரல் மாதம் ட்விட்டரில் ஆசிய அளவில் பிரபலமாக திகழ்ந்த விளையாட்டு அணிகள்: முதலிடத்தில் சிஎஸ்கே!

செய்திப்பிரிவு

சென்னை: கடந்த ஏப்ரல் மாதம் ஆசிய அளவில் ட்விட்டர் தளத்தில் மிக பிரபலமாக திகழ்ந்த அணிகள் குறித்த விவரம் வெளியாகி உள்ளது. இதில் 4 ஐபிஎல் அணிகளுடன் ஒரு கால்பந்தாட்ட அணியும் இணைந்துள்ளது.

இந்தியாவில் 2023-க்கான ஐபிஎல் சீசன் நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 31-ம் தேதி இந்த சீசன் தொடங்கியது. தற்போது லீக் சுற்றின் கடைசி கட்ட போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் உட்பட 7 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முயற்சித்து வருகின்றன. குஜராத் அணி முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகள் முதல் சுற்றோடு வெளியேறுகின்றன.

இந்நிலையில், கடந்த மாதம் ட்விட்டர் சமூக வலைதளத்தில் ஆசிய அளவில் மிகவும் பிரபலமாக திகழ்ந்த விளையாட்டு குறித்து விவரம் வெளியாகி உள்ளது. டிபோர்ட்ஸ் மற்றும் ஃபைனான்சாஸ் இந்த தகவலை தெரிவித்துள்ளன. ட்விட்டர் இன்ட்ரேக்ஷன்ஸ் அடிப்படையில் விளையாட்டு அணிகள் வரிசைபடுத்தப் பட்டுள்ளன.

  • சென்னை சூப்பர் கிங்ஸ் - 9.97 மில்லியன்
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 4.85 மில்லியன்
  • ராஜஸ்தான் ராயல்ஸ் - 3.55 மில்லியன்
  • Al-Nassr கால்பந்தாட்ட அணி - 3.50 மில்லியன்
  • மும்பை இந்தியன்ஸ் - 2.31 மில்லியன்
SCROLL FOR NEXT