இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்கள், பிரபலங்கள், சேவாக்குடன் விளையாடியவர்கள், இளம் வீரர்கள், ரசிகர்கள் எனப் பலரும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்தினை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சச்சின் டெண்டுல்கரும் தனது ட்விட்டர் பக்கத்தில் சேவாக்கை வாழ்த்திப் பதிவிட்டுள்ளார். ஆனால் அந்த வாழ்த்திலிருக்கும் எழுத்துகளை தலைகீழாக பதிவிட்டுள்ளார்.
அவரது வாழ்த்துச் செய்தியில், "பிறந்தநாள் வாழ்த்துகள் விரு. புது வருடம் சிறப்பான துவக்கத்தை தரட்டும். நான் களத்தில் என்ன சொன்னாலும் அதற்கு தலைகீழாக (நேர்மாறாகத்) தான் நீ செய்வாய். இதோ அதற்கு பதில் சொல்லும் விதமாக இப்போது என்னிடமிருந்து ஒரு வாழ்த்து" என்று கிண்டல் செய்துள்ளார்.
இதற்கு சேவாக், "மேலே இருக்கும் ஆண்டவன் தனது மக்களுக்காக எப்படி கடிதம் எழுதுவார் என்பது இப்போது புரிகிறது" என்று கிண்டலாக பதிலளித்துள்ளார்.
சச்சினின் ட்வீட்டை கிட்டத்தட்ட 10,000 பேர் ரீட்வீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.