நிதீஷ் ராணா 
விளையாட்டு

பந்துவீச கூடுதல் நேரம்: நிதீஷ் ராணாவுக்கு ரூ.24 லட்சம் அபராதம்

செய்திப்பிரிவு

சென்னை: பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதற்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் நிதீஷ் ராணாவுக்கு ரூ.24 லட்சம் அபராதத்தை ஐபிஎல் நிர்வாகம் விதித்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதின.

இதில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா 18.3 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. இந்நிலையில், இப்போட்டியில் கொல்கத்தா அணி பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதற்காக அந்த அணியின் கேப்டன் நிதீஷ் ராணாவுக்கு ரூ.24 லட்சம் அபராதத்தை ஐபிஎல் நிர்வாகம் விதித்துள்ளது. அதேபோல், இம்பேக்ட் வீரர் உள்பட கொல்கத்தா வீரர்கள் அனைவருக்கும் தலா ரூ.6 லட்சம் அல்லது போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் இதில் எது குறைவோ அந்தத் தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT