நிதிஷ் ராணா 
விளையாட்டு

பந்து வீச கூடுதல் நேரம்: நிதிஷ் ராணாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்

செய்திப்பிரிவு

மும்பை: பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 53-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணிகள் மோதின.

இதில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. பின்னர் 180 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. பஞ்சாப் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் பந்து வீச வழங்கப்பட்ட நேரத்தைவிட, கூடுதலாக நேரம் எடுத்துக் கொண்டதால் கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

SCROLL FOR NEXT