லிட்டன் தாஸ் 
விளையாட்டு

IPL 2023 | லிட்டன் தாஸ் அவசர பயணம்!

செய்திப்பிரிவு

கொல்கத்தா: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான லிட்டன் தாஸ், குடும்பத்தில் நிலவும் மருத்துவ பிரச்சினைகள் காரணமாக அவசரமாக தாயகம் சென்றுள்ளார். நேற்று காலை டாக்கா சென்றடைந்த அவர், எப்போது அணிக்கு திரும்புவார் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

28 வயதான லிட்டன் தாஸை கொல்கத்தா அணி அவரது அடிப்படை விலையான ரூ.50 லட்சத்துக்கு ஏலம் எடுத்திருந்தது. இந்த சீசனில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்கிய லிட்டன் தாஸ் பேட்டிங்கில் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஆட்டத்தின் போது விக்கெட் கீப்பிங்கில் இரு ஸ்டெம்பிங்க் வாய்ப்புகளை தவறவிட்டிருந்தார். இதன் பின்னர் அடுத்த ஆட்டங்களில் லிட்டன் தாஸுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

SCROLL FOR NEXT