விளையாட்டு

இந்த துறையில் நான் ஸ்கோர் செய்யவில்லை: சச்சின்

செய்திப்பிரிவு

இந்தத் துறையில் (படிப்பு) நான் ஸ்கோர் செய்யவில்லை  என்று நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சினின் ட்வீட் செய்துள்ளார்.

கிரிக்கெட் உலகில் ஜாம்பவனான இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் செய்த சாதனைகள் பட்டியலிட முடியாதவை.

சர்வதேச போட்டிகளில் 34,347 ரன்களும், 100 சதங்களும் அடித்துள்ள சச்சின் "தான் ஒரு துறையில் (படிப்பு) மட்டும் ஸ்கோர் செய்யவில்லை"  தனது ட்விட்டர் ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் சிறுவயதில் சச்சின் கையில் புத்தகத்தை படித்து கொண்டிருக்கும்  புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை கண்ட சச்சினின் ரசிகர்கள்  நீங்கள்தான் எங்கள் ரோல் மாடல் என்று அவர்களது அன்பு பதிவுகளால் முழ்கடித்து வருகின்றனர்.

இந்தப் புகைப்படத்தை சுமார் 24,000 பேர் லைக் செய்துள்ளார்கள். 2000-க்கும் மேற்பட்டோர் ரீடிவிட் செய்துள்ளார்கள்.

SCROLL FOR NEXT