கேக் வெட்டும் சச்சின் டெண்டுல்கர் 
விளையாட்டு

வான்கடேவில் ‘பிறந்த நாள்’ வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள்: கேக் வெட்டி மகிழ்ந்த சச்சின்!

செய்திப்பிரிவு

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், நாளை மறுநாள் (ஏப்ரல் 24) தனது 50-வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது வான்கடே மைதானத்தில் மும்பை அணியினர் மற்றும் ரசிகர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார்.

வான்கடேவில் குழுமியிருந்த ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க அந்த வாழ்த்து மழைக்கு நடுவே தனது பிறந்தநாளை சச்சின் கொண்டாடினார்.

இந்திய அணிக்காக 664 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சச்சின் விளையாடி உள்ளார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் இதில் அடங்கும். 34,357 ரன்கள் மற்றும் 201 விக்கெட்டுகளை சச்சின் கைப்பற்றி உள்ளார்.

SCROLL FOR NEXT