அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் ரஷித் லத்தீப் 
விளையாட்டு

“அர்ஜுன் டெண்டுல்கர் பவுலிங் ஆக்‌ஷனை மாற்றிக்கொள்ள வேண்டும்” - பாக். முன்னாள் வீரர் ரஷித் லத்தீப்

செய்திப்பிரிவு

லாகூர்: நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் அர்ஜுன் டெண்டுல்கர் தனது பவுலிங் ஆக்‌ஷனை மாற்ற வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரஷித் லத்தீப் கருத்து தெரிவித்துள்ளார்.

நடப்பு சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுக வீரராக இடது கை பவுலரான அர்ஜுன் களம் கண்டார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக தனது முதல் ஐபிஎல் விக்கெட்டை கைப்பற்றி இருந்தார். இந்த நிலையில் அவரது பவுலிங் ஆக்‌ஷன் குறித்து ரஷித் லத்தீப் கருத்து தெரிவித்துள்ளார்.

“தனது கிரிக்கெட் கேரியரின் தொடக்க நிலையில் அர்ஜுன் உள்ளார். அவர் கிரிக்கெட் சார்ந்து கடுமையாக பயிற்சி செய்ய வேண்டும். அவரது பவுலிங் ஆக்‌ஷனை மாற்ற வேண்டும். அவரது அலைன்மெண்ட் நன்றாக இல்லை. அதனால் பந்து வீச்சில் அவரால் வேகத்தை கூட்ட முடியாது.

பயோ மெக்கானிக்கல் ஆலோசகர் அவரை வழிநடத்தினால் இந்த மாற்றத்தை அவரால் செய்ய முடியும். அதன் மூலம் பந்து வீச்சில் வேகத்தை கூட்ட முடியும். சச்சினும் இதை செய்துள்ளார். ஆனால், அவர் டொமஸ்டிக் கிரிக்கெட்டில் இதற்காக நம்பி இருந்தார்.

மணிக்கு 135 கிலோ மீட்டர் வேகம் வரை அர்ஜுன் பந்து வீசலாம். நல்ல பேட்ஸ்மேனும் கூட. எப்படியும் அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் சிறந்த வீரராக உருவெடுப்பார்” என லத்தீப் தெரிவித்துள்ளார். இதை தனது யூடியூப் சேனலில் அவர் தெரிவித்துள்ளார். வீடியோ லிங்க்..

SCROLL FOR NEXT