விளையாட்டு

IPL 2023: RR vs LSG | கைல் மேயர்ஸ் அரைசதத்தால் 154 ரன்கள் சேர்த்த லக்னோ

செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி 154 ரன்கள் சேர்த்துள்ளது.

16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஜெய்ப்பூரில் நடக்கும் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்ய, லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல், கைல் மேயர்ஸ் இணை வழக்கத்துக்கு மாறாக நிதானமாக ஆடியது. முதல் விக்கெட்டுக்கு 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், கே.எல்.ராகுல் 39 ரன்களில் அவுட்டானார்.

இதன்பின் வந்தவர்களில் ஆயுஷ் பதோனி ஒரு ரன்னிலும், தீபக் ஹூடா 2 ரன்னிலும் அவுட்டாகி வெளியேறினர். மறுபுறம் பொறுப்பாக ஆடிய கைல் மேயர்ஸ் அரைசதமடித்து 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.

எனினும் ஸ்டோய்னிஸ் 21 ரன்கள், நிகோலஸ் பூரன் 29 ரன்கள் எடுக்க, இறுதியில் லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் அஸ்வின் அதிகபட்சமாக இரண்டு விக்கெட்கள் வீழ்த்தினார்.

SCROLL FOR NEXT