பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சயீத் அஜ்மல் இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்டி கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அனுமதியளித்துள்ளது. அவர் குறுகியகால அடிப்படையில் வார்செஸ்டர்ஷையர் அணிக்காக விளையாடவுள்ளார்.
இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமைச் செயல் அதிகாரி சுபன் அஹமது கூறுகையில், "கவுன்டி போட்டியில் விளையாட அஜ்மலுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஜுலை-ஆகஸ்ட் மாதங்களில் இலங்கை-பாகிஸ்தான் இடையில் கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. அதில் பங்கேற்பதற்காக ஜுலை மாத நடுவிலேயே அஜ்மல் பாகிஸ்தானுக்கு திரும்பிவிட வேண்டும்" என்றார்.-