இரட்டையர் பிரிவில் தங்கம் வென்ற இந்தியாவின் பிரமோத் பகத், சுகந்த் காதம் ஜோடி. 
விளையாட்டு

பாரா பாட்மிண்டன் போட்டியில் நித்ய ஸ்ரீ, நித்தேஷுக்கு தங்கப் பதக்கம்

செய்திப்பிரிவு

சாவோ பாவ்லோ: பாரா பாட்மிண்டன் சர்வதேச போட்டியில் இந்தியாவின் நித்ய ஸ்ரீ சுமதி சிவன், நித்தேஷ் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர்.

பிரேசில் நாட்டின் சாவோ பாவ்லோ நகரில் நடைபெற்ற இந்த தொடரில் மகளிருக்கான ஒற்றையர் எஸ்ஹெச் 6 பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் நித்ய ஸ்ரீ சுமதி சிவன் 22-20, 21-11 என்ற நேர் செட்டில் பெருவின் கியுலியானா போவேடா புளோரஸை தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றார். நித்ய ஸ்ரீ சுமதி சிவன் கலப்பு இரட்டையர் பிரிவிலும் தங்கம் வென்று அசத்தினார். சிவராஜன் சோலைமலையுடன் இணைந்து களமிறங்கிய நித்ய ஸ்ரீ சுமதி சிவன் இறுதிப் போட்டியில் 21-11, 21-17 என்ற நேர் செட்டில் ஹாங்காங்கின் சு மான் கை, சோய் விங் கைய் ஜோடியை வீழ்த்தியது.

ஆடவருக்கான ஒற்றையர் எஸ்எல் 3 பிரிவு இறுதிப் போட்டியில் டோக்கியோ பாராலிம்பிக் சாம்பியனான இந்தியாவின் பிரமோத் பகத், சகநாட்டைச் சேர்ந்த குமார் நித்தேஷை எதிர்த்து விளையாடினார். இதில் குமார் நித்தேஷ் 21-12, 21-13 என்ற செட் கணக்கில் வெற்று பெற்று தங்கப் பதக்கம் வென்றார். 2-வது இடம் பெற்ற பிரமோத் பகத் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

ஆடவருக்கான இரட்டையர் எஸ்எல் 3 -எஸ்எல் 4 பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் பிரமோத் பகத், சுகந்த் காதம் ஜோடி 22-20, 21-19 என்ற நேர் செட்டில் கொரியாவின் ஜூ டோங்ஜே, ஷின் கியுங் ஹ்வான் ஜோடியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.

SCROLL FOR NEXT