கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் அர்ஜூன் டெண்டுல்கர் மும்பை அணிக்காக அறிமுகமானார்.
16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 31-ந் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் தற்போது 4 ஆட்டங்களை நிறைவு செய்துள்ளன. ஒரு சில அணிகள் 5 ஆட்டங்களை நிறைவு செய்துள்ள நிலையில், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 3 போட்டிகளில் விளையாடி முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்தது.
கடந்த போட்டி டெல்லிக்கு எதிராக நடைபெற்றது. இதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை தோற்கடித்து ஃபார்முக்கு திரும்பியது மும்பை அணி. இந்நிலையில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் மும்பை, கொல்கத்தாவை எதிர்கொள்கிறது. இந்தப்போட்டியை சூர்யகுமார் யாதவ் வழிநடத்துகிறார். ரோஹித் ஷர்மா இம்பாக்ட் ப்ளேயராக கொண்டு வரப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா 14 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 135 ரன்களுடன் ஆடி வருகிறது.