ரஃபேல் நடால் | கோப்புப்படம் 
விளையாட்டு

பார்சிலோனா ஓபன் | காயம் காரணமாக ரஃபேல் நடால் விலகல்

செய்திப்பிரிவு

பார்சிலோனா: பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து காயம் காரணமாக ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் விலகியுள்ளார்.

ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் அடுத்த வாரம் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டி தொடங்கவுள்ளது. 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ள ரஃபேல் நடால் இந்தப் போட்டியில் பங்கேற்பதாக அறிவித்திருந்தார்.

ஆனால், ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டி முதலே காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் நடால், இந்தப் போட்டியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

அவர் ஏற்கெனவே இண்டியன் வெல்ஸ், மியாமி, மான்டி கார்லோ டென்னிஸ் போட்டிகளில் இருந்தும் காயம் காரணமாக விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT