இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன பரிசுத் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு, சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைக் காண அழைத்துச் செல்லப்பட்ட நுகர்வோர். படம்: ம.பிரபு 
விளையாட்டு

இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் நுகர்வோர் பரிசுத் திட்டம்: வெற்றி பெற்றவர்கள் ஐபிஎல் போட்டியை இலவசமாக காண ஏற்பாடு

செய்திப்பிரிவு

சென்னை: இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் புதிய நுகர்வோர் திட்டத்தில்வென்ற 120 பேர் சேப்பாக்கத்தில் நேற்று சிஎஸ்கே விளையாடிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைக் கண்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து இந்த பரிசுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு, இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் சார்பில், தமிழகத்தில் உள்ள நுகர்வோருக்கு புதிய வர்த்தகத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

‘சூப்பர் கிங்ஸ் வாங்குங்க, கிங்ஸ மீட் பண்ணுங்க’ என்ற இந்த திட்டத்தின் மூலம், சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை இலவசமாகப் பார்வையிட வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இந்தியா சிமென்ட்ஸ் பிராண்டுகளான சங்கர் சூப்பர் பவர், கோரமண்டல் கிங், கான்கிரீட் கிங் ஆகியவற்றில் குறைந்தபட்சம் 25 மூட்டை சிமென்ட் வாங்கினால், பரிசை வெல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

குலுக்கல் முறையில் தேர்வுசெய்யப்படுவோர், சிஎஸ்கே விளையாடும் ஐபிஎல் போட்டிகளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேரடியாகக் கண்டுகளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்தின்படி தமிழகம்முழுவதும் குலுக்கல் முறையில்120 பேர் தேர்வு செய்யப்பட்டு,சென்னைக்கு வரவழைக்கப்பட் டனர். அவர்களுக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நேற்றுமாலை `சிஎஸ்கே பவர் 7' லோகோவுடன் கூடிய இந்தியா சிமென்ட்ஸ் ‘டி-ஷர்ட்’ வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் கிரிக்கெட் போட்டியைக் காண சேப்பாக்கம் மைதானத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதுகுறித்து `தி இந்தியா சிமென்ட்ஸ்' நிறுவன சந்தைப் பிரிவு தலைமை அதிகாரிகள் பார்த்தசாரதி ராமானுஜம், ஷாஷங்க் சிங் ஆகியோர் கூறியதாவது: எங்களது நுகர்வோருக்கு ஒரு புதிய அனுபவத்தை அளிப்பதற்காகவே இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம். இதில் தமிழகம் முழுவதும் இருந்து 9,000 பேர் கலந்து கொண்டனர்.

அதிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 120 பேருக்கு எம்.எஸ்.தோனி கேப்டனாகச் செயல்படும் 200-வது போட்டியை நேரில் காணும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த பரிசுத் திட்டம் மே 10-ம் தேதி வரை அமலில் இருக்கும். இதில் வெற்றி பெறுவோர், சென்னையில் சிஎஸ்கே அணி விளையாடும் ஐபிஎல் போட்டிகளை இலவசமாகப் பார்வையிடலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT