தோனி மற்றும் சென்னை அணி வீரர்கள் 
விளையாட்டு

IPL | 200-வது போட்டியில் சிஎஸ்கே-வை வழிநடத்தும் தோனி: சாதனை துளிகள்!

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடப்பு ஐபிஎல் சீசனுக்கான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட உள்ளது. இது 200-வது போட்டியில் சிஎஸ்கே-வை கேப்டனாக தோனி வழிநடத்தும் போட்டியாகவும் அமைந்துள்ளது. இந்த நிலையில் அவர் தலைமையிலான சிஎஸ்கே சாதித்துள்ளது என்ன என்று பார்ப்போம்.

கடந்த 2008 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தி வருகிறார் அணியின் தலைமகன் தோனி. 2010, 2011, 2018 மற்றும் 2021 என நான்கு முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது சிஎஸ்கே. 2010 மற்றும் 2014-ல் சாம்பியன்ஸ் லீக் பட்டத்தையும் வென்றுள்ளது. 5 முறை ரன்னர்-அப்பாக சீசனை நிறைவு செய்து உள்ளது. 2 முறை நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது சென்னை அணி. இந்த தருணங்கள் அனைத்திலும் சென்னை அணியை வழிநடத்தியது தோனி. 2016 மற்றும் 2017 சீசன்களில் சென்னை அணி விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

199 போட்டிகள் சிஎஸ்கே கேப்டனாக: தோனி இதுவரையில் சென்னை அணியை 199 போட்டிகளில் கேப்டனாக வழிநடத்தி உள்ளார். அதில் 120 வெற்றிகளை சென்னை அணி பெற்றுள்ளது. 78 போட்டிகளில் தோல்வி மற்றும் 1 போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. ‘அவர் வழிநடத்தும் 200-வது போட்டியில் வெற்றி பெற்று, அதை அவருக்கு அன்பு பரிசாக வழங்குவோம்’ என சிஎஸ்கே ஆல்-ரவுண்டர் ஜடேஜா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT