விளையாட்டு

பிரபாஸின் 'ஆதி புருஷ்' படக்குழு வெளியிட்ட புதிய போஸ்டர்

செய்திப்பிரிவு

ஆதி புருஷ் படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஓம்ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் படம் ‘ஆதி புருஷ்’. இதில் பிரபாஸ், கிருத்தி சனோன், சையீப் அலி கான், சன்னி சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டி சீரிஸ் மற்றும் ரெட்ரோஃபைல்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் பூஷன் குமார், க்ரிஷன் குமார், ஓம் ராவத், பிரசாத் சுதார் மற்றும் ராஜேஷ் நாயர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படம் ஜூன் மாதம் 16ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படம் ஐமேக்ஸ் மற்றும் 3டி தொழில்நுட்பத்திலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

SCROLL FOR NEXT