மெஸ்ஸி | கோப்புப்படம் 
விளையாட்டு

அர்ஜெண்டினா அணிக்காக 100 சர்வதேச கோல்களை பதிவு செய்து மெஸ்ஸி சாதனை!

செய்திப்பிரிவு

பியூனஸ் அயர்ஸ்: சர்வதேச கால்பந்தாட்ட அரங்கில் அர்ஜெண்டினா அணிக்காக 100 சர்வதேச கோல்களை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார் கால்பந்து விளையாட்டின் சிறந்த வீரர்களில் ஒருவரான மெஸ்ஸி. Curacao அணிக்கு எதிரான நட்பு ரீதியிலான போட்டியில் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.

இந்தப் போட்டியில் மெஸ்ஸி ஹாட்-ட்ரிக் கோல்கள் பதிவு செய்து அசத்தி இருந்தார். முறையே ஆட்டத்தின் 20, 33 மற்றும் 37-வது நிமிடங்களில் இந்த மூன்று கோல்களையும் அவர் பதிவு செய்திருந்தார். அதுவும் உலகக் கோப்பையை அர்ஜெண்டினா வென்று 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில் தனது 100-வது சர்வதேச கோலை அவர் பதிவு செய்துள்ளார். கடந்த 2005 முதல் மெஸ்ஸி, அர்ஜெண்டினா அணிக்காக விளையாடி வருகிறார்.

அதே போல ஒட்டுமொத்தமாக தனது விளையாட்டு கேரியரில் 800-க்கும் மேற்பட்ட கோல்களை அவர் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் 7-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா வெற்றி பெற்றது.

சர்வதேச போட்டிகளில் அதிக கோல்கள் பதிவு செய்த வீரர்களில் மெஸ்ஸி தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளார். அவர் மொத்தம் 102 கோல்களை பதிவு செய்துள்ளார். இரண்டாவது இடத்தில் ஈரானின் அலி டேய், 109 கோல்களுடன் உள்ளார். முதல் இடத்தில் உள்ள போர்ச்சுகல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 122 கோல்களை பதிவு செய்துள்ளார்.

SCROLL FOR NEXT