விளையாட்டு

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: வெண்கலம் வென்றார் ருத்ராங்க்‌ஷ்

செய்திப்பிரிவு

போபால்: உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ருத்ராங்க்‌ஷ் பாட்டீல் வெண்கலப் பதக்கம் வென்றார்.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ருத்ராங்க்‌ஷ் பாட்டீல் 262.3 புள்ளிகள் சேர்த்து வெண்கலப் பதக்கம் பெற்றார். சீனாவைச் சேர்ந்த ஷெங் லிஹாவோ, டியு லின்ஷு முறையே தங்கம், வெள்ளிப் பதக்கம் வென்றனர். மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் ரமிதா 260.5 புள்ளிகளுடன் 4வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.

3-வது நாளின் முடிவில் பதக்கப் பட்டியலில் சீனா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது. 5 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம் என 8 பதக்கங்களுடன் சீனா முதலிடம் வகிக்கிறது. இந்தியா ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலம் என 5 பதக்கங்களுடன் 2வது இடத்தில் உள்ளது.

SCROLL FOR NEXT