இந்தியாவில் டென்னிஸ் துறையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன என்று முன்னணி டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ் கூறினார்.
உலக பெண்கள் டென்னிஸ் கூட் டமைப்பின் (WTA) சார்பில் ஆண்டு தோறும் பெண்களுக்கான உலக டென்னிஸ் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான போட்டிகள் சிங்கப்பூரில் வரும் அக்டோபர் 17 முதல் 26-ம் தேதி வரை நடக்கிறது. போட்டியின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் சனிக்கிழமை நடந்தது. இதில் சிறப்பு விருந்தி னராக டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ் பங்கேற்றார். அவர் கூறியதாவது:
ஆசிய நாடுகளில் மிகப் பெரிய டென்னிஸ் போட்டி களை நடத்துவது கனவாகவே இருந்து வந்த நிலையில், சிங்கப்பூரில் உலக அளவி லான பெண்கள் டென்னிஸ் போட்டி நடத்த இருப்பது முக்கிய மானது.
இப்போட்டியில் இந்தியா விலிருந்து சானியாமிர்சா மட்டுமே பங்கேற்கிறார். மேற் கத்திய நாடுகளிலிருந்து நிறைய பேர் இப்போட்டிகளில் பங்கேற் கின்றனர்.
நமது நாட்டில் டென்னிஸ் விளை யாட்டிற்கான கட்டமைப்பு நல்ல அளவில் உள்ளது. ஸ்பான்ஸர் செய்ய நிறுவனங்களும் தயார் நிலை யில் உள்ளன.
இத்தனை இருந்தும் ஆர்வத்துடன் டென்னிஸ் விளை யாட வருபவர்கள் மிகவும் குறை வாகவே உள்ளனர். இதனை இன்றைய தலைமுறையினர் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் சிங்கப்பூர் சுற்றுலாத் துறையின் வர்த்தக மேலாண்மை இயக்குநர் சேங் சீ பே கூறும்போது, “ ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் வருகிற ஆகஸ்ட் 8, 9-ம் தேதிகளில் டென்னிஸ் போட்டிகள் நடக்க உள்ளன.
இதில் வெற்றி பெறுபவர்கள் உலக மகளிர் டென்னிஸ் போட்டியை காண அழைத்து செல்லப்படுவார்கள்” என்றார்.