புதுடெல்லி: ரிஷப் பந்த், கார் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வருவதால் ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் சீனியர் பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடர் வரும் 31-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் கலந்து கொள்ளும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு இந்த சீசனின் கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சீசன்களில் கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பந்த், கார் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வருவதால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம். துணை கேப்டனாக அக்சர் படேல் செயல்பட உள்ளார். டேவிட் வார்னர், ஐபிஎல் தொடரில் 13 சீசன்களில் விளையாடி 42.01 சராசரியுடன் 5,881 ரன்கள் குவித்துள்ளார். இதில் 4 சதங்கள், 55 அரை சதங்கள் அடங்கும்.