விளையாட்டு

மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: முதல் சுற்றில் நிகத் ஜரீன் வெற்றி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மகளிருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் நிகத் ஜரீன் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மகளிருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் 50 கிலோ எடைப் பிரிவின் முதல் சுற்றில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் நிகத் ஜரீன், அஜர்பைஜானின் அனகானிம் இஸ்மயிலோவாவை எதிர்த்து விளையாடினார்.

இதில் தொடக்கம் முதலே நிகத் ஜரீன் ஆதிக்கம் செலுத்தினார். அவரது பஞ்ச்களில் 2-வது ரவுண்டிலேயே அனகானிம் இஸ்மயிலோவா நிலை குலைந்தார். இதனால் நிகத் ஜரீன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 52 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சாக் ஷி 5-0 என்ற கணக்கில் கொலம்பியாவின் மார்டினெஸ் மரியா ஜோஸை தோற்கடித்தார்.

SCROLL FOR NEXT