மெல்பர்ன்: ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷான் மார்ஷ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
சர்வதேச போட்டிகளில் இருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்ட ஆஸ்திரேலிய முன்னணி வீரரான ஷான் மார்ஷ், மேற்கு ஆஸ்திரேலிய அணிக்காக தொடர்ந்து ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டிகளில் விளையாடி வந்தார்.
22 ஆண்டுகள் விளையாடிய நிலையில் நேற்று அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டிகளில் அவர் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ளார்.
40 வயதாகும் ஷான் மார்ஷ், டெஸ்ட் போட்டிகளில் 2,265 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 2,773 ரன்களும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.