சென்னை: கர்நாடக மாநிலம் உடுப்பியில் 18-வது தேசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் இன்று (10-ம் தேதி) தொடங்கி வரும் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் தமிழகத்தில் இருந்து 23 வீரர்கள், 26 வீராங்கனைகள் என மொத்தம் 49 பேர் பங்கேற்கின்றனர். இவர்களில் நிஷோக் (100 மீட்டர் ஓட்டம்), ஷரோன் (200 மற்றும் 400 மீட்டர் ஓட்டம்), விஷ்ணு ஸ்ரீ (400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம்), ஜெரோம் சஞ்ஜெய் நிஷாந்த் (400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம்), அபிநயா (100 மீட்டர் ஓட்டம்), அக்ஸ்லின் (400 மீட்டர் ஓட்டம்), அன்ஸ்லின் (800 மீட்டர் ஓட்டம்), ரூபிகா (800 மீட்டர் ஓட்டம்), யாமினி (100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம்), பவீனா (நீளம் தாண்டுதல், டிரிப்பிள் ஜம்ப்) ஆகியோர் மீது எதிர்பார்ப்பு உள்ளது.