விளையாட்டு

முதுகுவலி பிரச்சினை - ஜஸ்பிரீத் பும்ராவுக்கு அறுவை சிகிச்சை

செய்திப்பிரிவு

மும்பை: முதுகுவலி பிரச்சினைக்காக இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா, நியூஸிலாந்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் போது பும்ராவுக்கு முதுகுவலி ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்ட அவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான
டி 20 தொடரின் இரு ஆட்டங்களில் பங்கேற்றார். இதன் பின்னர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து விலகினார். டி 20 உலகக் கோப்பை தொடரிலும் அவர் விலக நேரிட்டது.

சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் பும்ராவின் பெயர் இடம் பெற்றிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவர், விலகினார். இதையடுத்து பும்ராவுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக நியூஸிலாந்து சென்ற பும்ரா, அங்கு கடந்த திங்கட்கிழமை முதுகுவலி பிரச்சினைக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
29 வயதான பும்ரா, கடைசியாக இந்திய அணிக்காக 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விளையாடி இருந்தார்.

SCROLL FOR NEXT