விளையாட்டு

ஐசிசி தரவரிசை - முதலிடத்தில் நீடிக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்

செய்திப்பிரிவு

துபாய்: டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் கடந்த வாரம் முதலிடத்தை பிடித்திருந்த இந்திய அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது முதலிடத்தை இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சனுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இருவரும் தலா 859 புள்ளிகள் பெற்றுள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தூரில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 4 விக்கெட்கள் மட்டுமே கைப்பற்றினார். இதனால் தரவரிசை பட்டியலில் அஸ்வின் 6 ரேட்டிங் புள்ளிகளை இழந்துள்ளார்.

SCROLL FOR NEXT