மேத்வதேவ் 
விளையாட்டு

துபாய் ஓபன் | சாம்பியன் பட்டம் வென்றார் மேத்வதேவ்

செய்திப்பிரிவு

துபாய்: துபாய் டூட்டி ப்ரீ ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ரஷ்ய வீரர் டேனியல் மேத்வதேவ் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒற்றையர் இறுதிச் சுற்றில் டேனியல் மேத்வதேவ், சகநாட்டு வீரர் ஆந்த்ரே ரூபலேவுடன் மோதினார். இதில் மேத்வதேவ் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ரூபலேவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

இந்தப் போட்டியின் அரை இறுதியில் டேனியல் மேத்வதேவ், தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் செர்பியா நாட்டுவீரரான நோவக் ஜோகோவிச்சை அரையிறுதியில் வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேத்வதேவ் இந்த ஆண்டில் ரோட்டர்டாம், தோஹா, துபாய்ஏடிபி போட்டிகளில் தொடர்ச்சியாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

SCROLL FOR NEXT