இஸ்லாமாபாத்: இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலிக்கு, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர்தான் உலகத்திலேயே மிகவும் சிறந்த பேட்ஸ்மேன் என்று நான் நம்புகிறேன். ஆனால், கேப்டன் பொறுப்பில் சச்சின் எதையும் சாதிக்கவில்லை. கேப்டன் பதவியை வேண்டாம் என்று கூறிவிட்டார்.
சமீபகாலமாக இந்திய அணி வீரர் விராட் கோலி ஃபார்மில் இல்லாமல் தடுமாறி வந்தார்.
ஆனால் அவர் தன்னுடைய மனதை பலப்படுத்திக் கொண்டு மீண்டும் கிரிக்கெட் களத்தில் ஆட்சி செய்து வருகிறார். கோலி சாதனையை பார்த்தாலே இது தெரியும். என்னை பார்க்கும் நண்பர்கள், நீங்கள் கோலியை வெகுவாக பாராட்டி வருகிறீர்கள் என்று கூறுகின்றனர். நான் அவர்களிடம் திருப்பிகேட்பதெல்லாம் அவரை பாராட்டாமல் எப்படி இருக்க முடியும் என்பதுதான். இவ்வாறு அவர் கூறினார்.