விளையாட்டு

கால் இறுதியில் பயஸ் ஜோடி

செய்திப்பிரிவு

எஸ்டோரில் ஓபன் டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், பிரேலின் ஆன்ட்ரே சா மற்றும் இந்தியாவின் திவிஜ் சரண், புரவ் ராஜா ஜோடி கால் இறுதிக்கு முன்னேறியது.

போர்ச்சுக்கல் நாட்டின் எஸ்டோரில் நகரில் எஸ்டோரில் ஓபன் டென்னிஸ் போட்டி நடை பெற்று வருகிறது. இதில் இரட்டையர் பிரிவு தரவரிசை யில் 4-வது இடத்தில் உள்ள லியாண்டர் பயஸ், பிரேலின் ஆன்ட்ரே சா ஜோடி 7-6, 6-2 என்ற நேர் செட்டில் அர்ஜென்டி னாவின் ரென்சோ ஒலிவோ, பிரான்சின் பெனோயிட் பேர் ஜோடியை வீழ்த்தியது.

திவிஜ் சரண், புரவ் ராஜா ஜோடி 6-0, 7-6 என்ற நேர் செட்டில் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள நியூஸிலாந்தின் மார்கஸ், பிரேசிலின் டெமாலினர் ஜோடியை தோற்கடித்தது.

SCROLL FOR NEXT