விளையாட்டு

அர்ஜென்டீனா தோற்றால் மெஸ்ஸியை குறை கூறக்கூடாது: மரடோனா

செய்திப்பிரிவு

அர்ஜென்டீனா அணி உலகக் கோப்பை கால்பந்து காலிறுதிக்குள் நுழைந்தாலும் முன்னாள் நட்சத்திரம் டீகோ மரடோனா அந்த அணியின் ஆட்டத்தில் திருப்தி அடையவில்லை.

வெனிசூலா தொலைக்காட்சியில் அவர் தினமும் உலகக் கோப்பைக் கால்பந்தாட்டம் பற்றி பேசி வருகிறார். அதில் அவர் அர்ஜென்டீனா அணியின் ஆட்டத்தை விமர்சனம் செய்துள்ளார்.

"நான் பார்த்தவரையில் அர்ஜென்டீனா அணிக்கு ஆட்டம் சரியாகப் போவதாகத் தெரியவில்லை. வீரர்கள் திறமையில் 40 சதவீதமே வெளிப்பட்டுள்ளது. இன்னும் சில வீரர்கள் இந்த உலகக் கோப்பையில் சரியாகவே ஆடத் தொடங்கவில்லை என்றே நான் கருதுகிறேன்.

அர்ஜென்டீனா அணி விழித்துக் கொள்ளவில்லை எனில் கடினமான சூழ்நிலையே ஏற்படும், முன்கள வீரர்களின் ஆட்டத்தில் வேகம் இல்லை.

மெஸ்ஸி தானாகவே அனைத்தையும் செய்ய வேண்டியுள்ளது. அவருக்கும் ஆட்டம் சரிவராது போனால் அர்ஜென்டீனா தோல்விக்கு அவரைப் பொறுப்பாக்கக் கூடாது" என்று கூறியுள்ளார் மரடோனா.

SCROLL FOR NEXT