விளையாட்டு

தகுதி சுற்றில் ராம் குமார், யூகி பாம்ப்ரி தோல்வி

பிடிஐ

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தகுதி சுற்றில் இந்திய வீரர்களான ராம் குமார் ராமநாதன், யூகி பாம்ப்ரி ஆகியோர் தோல்வியடைந்தனர்.

தகுதி சுற்றின் முதல் ஆட்டத்தில் யூகி பாம்ப்ரி 6-7, 6-7 என்ற செட் கணக்கில் கடுமையாக போராடி தரவரிசையில் 132-வது இடத்தில் உள்ள கனடா வீரர் பீட்டர் போலன்ஸ்கியிடம் தோல்வியடைந்தார். ராம் குமார் ராமநாதன் 2-6, 1-6 என்ற நேர் செட்டில் தரவரிசையில் 114-வது இடத்தில் உள்ள அர்ஜென்டினாவின் கைடோ பெல்லாவிடம் வீழ்ந்தார்.

SCROLL FOR NEXT