விளையாட்டு

சிஎஸ்கே அணி வீரர் ஜேமிசன் காயம்

செய்திப்பிரிவு

மும்பை: நியூஸிலாந்து முன்னணி வீரரான கைல் ஜேமிசன் 2023 ஐபிஎல் போட்டிக்காக சிஎஸ்கே அணியால் ஏலம் எடுக்கப்பட்டிருந்தார். ஏலத்தில், ஜேமிசனை ரூ. 1 கோடிக்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் தேர்வு செய்திருந்தது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான இருநாள் பயிற்சி ஆட்டத்தில் ஜேமிசன் விளையாடினார். அப்போது அவருக்கு முதுகில் காயம் ஏற்பட்டது.

மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்த பின்னர் முதுகில் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். அறுவை சிகிச்சைக்குப் பின்னர் 3 முதல் 4 மாதங்களுக்கு அவரால் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகவலை நியூசிலாந்துத் தலைமைப் பயிற்சியாளர் கேரி ஸ்டட் உறுதி செய்துள்ளார். இதனால் ஐபிஎல் போட்டியில் அவர் விளையாடமாட்டார் எனத் தெரியவந்துள்ளது.

SCROLL FOR NEXT