விளையாட்டு

IND vs AUS டெஸ்ட் | ஜோஷ் ஹேசில்வுட் விலகல்

செய்திப்பிரிவு

சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசில்வுட் குதி கால் பகுதியில் ஏற்பட்டுள்ள தசைநார் காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் கலந்துகொள்ளாமல் இருந்தார்.

இந்நிலையில் போட்டியில் பங்கேற்பதற்கான முழு உடற்தகுதியையும் அவர், இன்னும் அடையவில்லை என்பதால் இந்தியாவுக்கு எதிரான எஞ்சியுள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஜோஷ் ஹேசில்வுட் விலகி உள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. விரைவில் அவர், தாயகம் திரும்புவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT