குஜராத் லயன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் மெக்கல்லம் காயம் காரணமாக 2017-ம் ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் மெக்கல்லம் இந்திய பீரிமியர் லீகில் குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். வியாழக்கிழமை டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மெக்கல்லமுக்கு தொடை எலும்பில் முறிவு ஏற்பட்டது. இந்தக் காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக மெக்கல்லம் அறிவித்திருக்கிறார்.
இதுகுறித்து மெக்கல்லம் ட்விட்டர் பக்கத்தில், "காயங்கள் ஏற்படுவது விளையாட்டில் ஒரு பகுதியே. தொடரில் விளையாட முடியாமல் போனது வருத்தமாக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த ஐபிஎல் சீசனில் குஜராத லயன்ஸ் அணிக்காக 11 போட்டிகளில் விளையாடியுள்ள மெக்கல்லம் 320 ரன்கள் எடுத்துள்ளார்.