விளையாட்டு

1,100 மாணவர்கள் பங்கேற்றுள்ள ஜூடோ சாம்பியன்ஷிப் தொடக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: தேசிய சப்-ஜூனியர் மற்றும் கேடட் ஜூடோ சாம்பியன்ஷிப் தொடர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. வரும் 21-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியை தமிழ்நாடு ஜூடோ அசோசியேஷன், ஜூடோ ஃபெடரேஷன் இந்தியா, இந்திய ஒலிம்பிக் சங்கம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.

இந்த தொடரில் 28 மாநிலங்களில் இருந்து 1,100 மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் 2500- க்கும் மேற்பட்ட போட்டிகளில் மோதுகின்றனர்.

இந்த போட்டிகளை நேற்று தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஜூடோ அசோசியேஷன் தலைவர் விஜய மோகன முரளி, மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT