விளையாட்டு

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: பந்து வீச்சாளர் பட்டியலில் அஸ்வின் முதலிடம் பிடிக்க வாய்ப்பு

செய்திப்பிரிவு

துபாய்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது.

இதன் மூலம் ஐசிசிடெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை கைப்பற்றி உள்ளது இந்திய அணி.115 ரேட்டிங் புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடம் வகிக்கிறது. ஆஸ்திரேலியா 111 புள்ளிகளுடன்2-வது இடத்தில் உள்ளது.

இந்திய அணி ஏற்கெனவே ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி 20 கிரிக்கெட் தரவரிசையிலும் முதலிடம்வகிக்கிறது. தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் முதலிடத்தை கைப்பற்றி உள்ளது. இதன் மூலம் அனைத்து வடிவிலான கிரிக்கெட்தரவரிசை பட்டியலிலும் இந்தியாஆதிக்கம் செலுத்தத் தொடங்கி உள்ளது.

நாக்பூர் டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களையும், 2-வது இன்னிங்ஸில் 5 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தார். இதன் மூலம் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் அஸ்வின் முதலிடத்தை நெருங்கி உள்ளார். முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸுக்கும் (867) அஸ்வினுக்கும் (846) இடையிலான புள்ளிகள் வித்தியாசம் 21 ஆக உள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணி மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதனால் அஸ்வின் முதலிடத்தை பிடிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

SCROLL FOR NEXT