சென்னை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் குடியரசு தின, பாரதியார் தின மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி சிவகங்கை மாவட்டம் சாம்பவிகா மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
38 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த போட்டிகளில் பங்கேற்றனர். இதில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான 50 - 52கிலோ எடை பிரிவு குத்துச்சண்டையில் திருவள்ளூர் மாவட்டம் கத்திவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ். பிரியதர்ஷினி தங்கப் பதக்கம் வென்றார்.
இறுதி ஆட்டத்தில் அவர், கரூர் மாணவியை தோற்கடித்தார். இதே பள்ளியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் ஆர்.கவின் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான 46 - 48 கிலோ எடை பிரிவு குத்துச்சண்டையில் வெண்கலப் பதக்கம் வென்றார்.