புது டெல்லி: காதலர் தினத்தை முன்னிட்டு இளம் ரசிகர்கள் தனக்கு பகிர்ந்த வாழ்த்து அட்டைகளை பகிர்ந்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த். அதில் குழந்தைகள் தங்களது அன்பை வெளிப்படுத்தும் விதம் அற்புதம் என சொல்லியுள்ளார் பந்த்.
கடந்த ஆண்டு கார் விபத்தில் சிக்கிய பந்த் தற்போது ஓய்வில் உள்ளார். அவர் களம் திரும்ப எப்படியும் சில காலம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அவருக்கு மூட்டு பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் அவருக்கு இளம் வயது ரசிகர்கள் பகிர்ந்த காதலர் தின வாழ்த்து அட்டைகளை இன்ஸ்டா ஸ்டோரியாக பந்த் பகிர்ந்துள்ளார்.
“குழந்தைகள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் விதம் அற்புதம்” என சொல்லி அந்த வாழ்த்து அட்டைகளை பந்த் பகிர்ந்துள்ளார். கடந்த வாரம் காயத்தில் இருந்து மீண்டு வருவதாக சொல்லி இருந்தார். அதன்போது அவர் ஊன்றுகோலை தாங்கியபடி நடக்கும் படத்தை பகிர்ந்திருதார்.
ஸ்பைடர்மேன், ரிஷப் பந்த்தின் ஜெர்சி, சில குறிப்புகளையும் அதில் இளம் வயது ரசிகர்கள் எழுதி உள்ளனர். காதல், சிவா, சம்யுக்தா, மஸ்தான் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார் பந்த்.