விளையாட்டு

பாக். அணியில் ஹரிஸ் சோஹைல்

செய்திப்பிரிவு

இங்கிலாந்தில் வரும் 1-ம் தேதி தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக பாகிஸ்தான் அணி பர்மிங்காமில் சிறப்பு பயிற்சி முகாமில் ஈடுபட்டுள்ளது. இந்த முகாமில் உடல் தகுதி தேர்வில் தோல்வியடைந்த உமர் அக்மல் அணியில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டார். இதையடுத்து அவர் தாயகம் திரும்பி உள்ளார்.

இந்நிலையில் அவருக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்வதற்கான பணியில் தேர்வுக்குழு தலைவர் இன்சமாம் உல்-ஹக் ஈடுபட்டார். இதையடுத்து உமர் அமின் ஹரிஸ் சோஹைல், ஆசிப் ஜாகீர் ஆகிய 3 வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் இருந்து பேட்ஸ்மேனான ஹரிஸ் சோஹைல் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.

22 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள ஹரிஸ் சோஹைல் 7 அரை சதங்களுடன் 774 ரன்கள் சேர்த்துள்ளார். கடைசியாக பாகிஸ்தான் அணிக்காக கடந்த 2015-ம் ஆண்டு விளையாடியிருந்தார். முழங்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர் சமீபகாலமாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் மீண்டும் அணிக்கு தேர்வாகி உள்ளார்.

SCROLL FOR NEXT