விளையாட்டு

மாநில ஹாக்கி போட்டியில் ஐஓபி அணிக்கு சுழற்கோப்பை

செய்திப்பிரிவு

அரியலூரில் நடைபெற்ற மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் ஐஓபி அணி சுழற்கோப்பையை வென்றது.

பசுபதி மற்றும் டாக்டர் அப்துல் சாதிக் நினைவு ஹாக்கி கழகம் சார்பில் 12-ம் ஆண்டு மாநில அளவிலான ஹாக்கி போட்டி அரியலூரில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, வாடிப்பட்டி எவர்கிரீன் அணி, திருச்சி சோழன் அணி, சென்னை நகர போலீஸ் அணி, எப்.சி.ஐ. ராமநாதபுரம் மாவட்ட அணி, அரியலூர் ஹாக்கி அணி, ஐசிஎப் தெற்கு ரயில்வே அணி, தமிழ்நாடு போலீஸ் அணி உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற் றன.

நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் விளையாடிய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி டை பிரேக்கர் முறையில் 5-4 என்ற கோல் கணக்கில் தெற்கு ரயில்வே அணியை வென்றது. மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணிக்கு சுழற்கோப்பையை அரசு தலைமை கொறடா தாமரை.எஸ்.ராஜேந்திரன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் எம்.பி. சந்திரகாசி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை பசுபதி மற்றும் டாக்டர் அப்துல் சாதிக் நினைவு ஹாக்கி கழக தலைவர் டி.எழில்நிலவன், செயலர் பாரதிதாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT