கோப்புப்படம் 
விளையாட்டு

IND vs AUS டெஸ்ட் தொடர் | அதிக ரன்கள், சதங்கள் விளாசிய வீரர்கள் யார் யார்? - இது பேட்டிங் சாதனை துளிகள்

செய்திப்பிரிவு

நாக்பூர்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் வியாழன் அன்று தொடங்க உள்ளது. இந்நிலையில், இந்தத் தொடரில் அதிக ரன்கள், அதிக சதங்கள் விளாசிய வீரர்கள் யார் என்பதை விரிவாகப் பார்ப்போம்.

பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியை இந்தத் தொடரில் எதிர்கொள்ள உள்ளது. கடந்த 1996 முதல் இரு அணிகளும் இந்தத் தொடரில் விளையாடி வருகின்றன. இதுவரை 15 தொடர்கள் விளையாடப்பட்டுள்ளன.

அதிக ரன்கள் எடுத்த டாப் 5 பேட்ஸ்மேன்கள்

  • சச்சின் டெண்டுல்கர்: 34 போட்டிகள் - 3262 ரன்கள்
  • ரிக்கி பாண்டிங்: 29 போட்டிகள் - 2555 ரன்கள்
  • லஷ்மண்: 29 போட்டிகள் - 2434 ரன்கள்
  • ராகுல் திராவிட: 32 போட்டிகள் - 2143 ரன்கள்
  • மைக்கேல் கிளார்க்: 22 போட்டிகள் - 2049 ரன்கள்

அதிக சதங்கள் விளாசிய வீரர்கள்

  • சச்சின் டெண்டுல்கர் - 9
  • ஸ்டீவ் ஸ்மித் - 8
  • ரிக்கி பாண்டிங் - 8
  • விராட் கோலி - 7
  • மைக்கேல் கிளார்க் - 7

அதிக அரைசதம் விளாசிய வீரர்கள்

  • சச்சின் டெண்டுல்கர் - 16
  • ராகுல் திராவிட் - 13
  • ரிக்கி பாண்டிங் - 12
  • விவிஎஸ் லட்சுமண் - 12
  • புஜாரா - 10
SCROLL FOR NEXT