ஜாக்ரெப்: குரோஷியாவில் உள்ள ஜாக்ரெப் நகரில் ஜாக்ரெப் ஓபன் மல்யுத்த போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 67 கிலோ எடைப் பிரிவு கிரகோ ரோமன் பிரிவில் இந்தியாவின் அஷு வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் லிதுவேனியாவின் அடோமாஸ் கிரிகாலியுனாஸை எதிர்த்து விளையாடினார். இந்த மோதலில் 23 வயதான அஷு 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் பெற்றார்.
முன்னதாக அஷு தகுதி சுற்றில் 0-9 என்ற கணக்கில் ஈரானின் ரேசா மஹ்தி அப்பாஸியிடம் தோல்வி அடைந்தார். ரெப்பேஜ் சுற்றில் ஹங்கேரியின் ஆடம் ஃபோலெக்கை 8-0 என்ற கணக்கிலும், நார்வேயின் ஹாவர்ட் ஜோர்கென்சன் 9-0 என்ற கணக்கிலும் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தார்.