பிரேசில் ஓபன் டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் அமல்ராஜ் அதிர்ச்சி தோல்வியடைந் தார்.
பிரேசிலில் நடைபெற்ற இந்த போட்டியின் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் அமல்ராஜ், பிரேசிலின் கால்ட்ரனோ ஹியூ கோவை எதிர்த்து விளையாடினார். இதில் அமல் ராஜ் 12-14, 9-11,7-11, 7-11, 5-11 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியடைந்தார்.
கடந்த இருவாரத்தில் அமல்ராஜ் 2-வது முறையாக இறுதிப் போட் டியில் தோல்வியடைந்து பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளார். கடந்த வாரம் சிலி ஓபன் இறுதிப் போட்டியில் சகநாட்டைச் சேர்ந்த சவுமியாஜித் கோஷிடமும் தோல்வியை சந்தித்திருந்தார் அமல்ராஜ்.
எனினும் அந்த தொடரில் அவர் இரட்டையர் பிரிவில் அமல்ராஜ் உடன் இணைந்து பட்டம் வென்றிருந்தார்.