விளையாட்டு

ஆசிய தடகளத்தில் தமிழக வீரர்கள் 7 பேர் பங்கேற்பு

செய்திப்பிரிவு

சென்னை: 10-வது ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில் உள்ள அஸ்தானா நகரில் வருகிற 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் 26 பேர் கொண்ட இந்திய அணி கலந்து கொள்கிறது. இந்திய தடகள அணியில் தமிழகத்தை சேர்ந்த இலக்கிய தாசன் (60 மீட்டர் ஓட்டம்), ஜெஸ்வின் ஆல்ட்ரின் (நீளம் தாண்டுதல்), பிரவீன் சித்ர வேல் (டிரிப்பிள் ஜம்ப்), சிவசுப்பிர மணியம் (போல்வால்ட்), அர்ச் சனா (60 மீட்டர் ஓட்டம்), ரோசி மீனா (போல்வால்ட்), பவித்ரா (போல்வால்ட்) ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இந்திய தடகள அணிக்கு தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT