விளையாட்டு

'எங்கள் வாழ்க்கையின் மேஜிக்கல் நாள் இது' - காதலியை மணந்தார் கிரிக்கெட் வீரர் அக்சர் படேல்

செய்திப்பிரிவு

வதோதாரா: இந்திய கிரிக்கெட் அணி வீரர் அக்சர் படேல், தனது காதலி மேஹாவை மணந்துள்ளார். குஜராத் மாநிலம் வதோதாராவில் இவர்களில் திருமணம் நடந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் வீரர் அக்சர் படேல். 2014ல் இந்தியாவுக்காக அறிமுகமானாலும், சமீபகாலமாக தனது திறமையால் மூன்று வடிவ போட்டிகளிலும் தவறாமல் இடம்பிடித்து வருகிறார். தற்போது நடந்து வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்காத அக்சர், தனது நீண்ட நாள் காதலியான மேஹாவை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

மேஹா படேல் ஊட்டச்சத்து நிபுணர். இருவரும் நீண்ட வருடங்களாகவே காதலித்து வந்த நிலையில் 2022 ஜனவரியில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஒருவருடம் கழித்து இப்போது இருவரும் இல்லற வாழ்க்கையில் இணைந்துள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

திருமண செய்தியை வலைதளங்களில் பகிர்ந்துகொண்ட அக்சர் படேல், "எனது நல்ல தோழியை மணந்துகொண்டேன். இது எங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான மேஜிக் நாள். இதை இன்னும் சிறப்பானதாக மாற்றியதற்காக எங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT