விளையாட்டு

இந்தியாவிடம் நாங்கள் பிச்சை கேட்கவில்லை: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஆவேசம்

பிடிஐ

இந்தியாவை எங்களுடன் கிரிக் கெட் விளையாடக்கோரி நாங்கள் பிச்சை கேட்கவில்லை. ஒப்பந்தப் படி விளையாட கோருவது எங்களது உரிமை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் சகார்யார் கான் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகள் இந்திய எல்லையை தாண்டி தாக்குதல்கள் நடத்தி வருவதால் பாகிஸ்தானுக்கு எதிரான இருதரப்பு கிரிகெட் போட்டிகளை இந்திய கிரிக்கெட் வாரியம் தவிர்த்து வருகிறது. ஐசிசி தொடர்களில் மட்டுமே பாகிஸ் தானுக்கு எதிராக இந்திய அணி விளையாடும் நிலை உள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் சகார்யார் கான் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

இந்தியாவை எங்களுடன் கிரிக்கெட் விளையாடக்கோரி நாங்கள் பிச்சை கேட்கவில்லை. தயவு செய்து அதுபோன்ற ஒரு உணர்வு வேண்டாம். பிசிசிஐ எங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந் தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன்படி 2015 முதல் 2023-ம் ஆண்டு வரை எங்களுடன் 6 இருதரப்பு தொடர்களில் இந்திய அணி விளையாட வேண்டும். இதை எதிர்கொள்ள பிசிசிஐ மறுக்கிறது.

ஒரு கிரிக்கெட் விளையாடும் நாடாகவும் ஒப்பந்தப்படியும் இந்திய அணியை எங்களுடன் விளையாட வற்புறுத்துவது எங்களது உரிமை. கடைசியாக இரு அணிகள் இடையேயான இருதரப்பு தொடர் 2007-ம் ஆண்டு நடைபெற்றது.

இதனால் உடனடியாக இரண்டு இருதரப்பு தொடர்களை நடத்த பிசிசிஐ கடமைப்பட்டுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தப்படி 2015 முதல் 2023-ம் வரை உள்ள காலக்கட்டத்தில் நாங்கள் 4 தொடர்களை நடத்த வேண்டும்.

பிசிசிஐ, எங்கள் அணிக்கு எதிராக விளையாட மறுப்பதால் நாங்கள் பெரிய அளவிலான வருமான இழப்பை சந்தித்துள் ளோம். இதுதொடர்பாக கேப்ட வுனில் நடைபெற்ற ஐசிசி செயற்குழு கூட்டத்திலும் எடுத்து ரைத்துள்ளோம்.

வரும் 17-ம் தேதி இலங்கையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பிசிசிஐ உடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக விவாதிப்போம்.

இவ்வாறு சகார்யார் கான் கூறினார்.

SCROLL FOR NEXT