விளையாட்டு

ஐசிசி டெஸ்ட் அணியில் கோலி இல்லாதது வருத்தம்: அனுராக் தாக்குர் கருத்து

பிடிஐ

இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரிய (பிசிசிஐ) தலைவர் அனுராக் தாக்குர் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தற்போது சந்தித்து வரும் பிரச்சினைகள் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மத்திய அரசிடம் இருந்து ஒரு ரூபாயைக் கூட பெறாமல், இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டை முன் னேற்றி வருகிறது. இருப்பினும் ஒருசிலர் எங்களுக்கு எதிராக கருத்துகளைக் கூறி வருகின் றனர்.

எங்களிடம் ஏராளமான பணம் இருக்கிறது. இருப்பினும் அவற்றை கிரிக்கெட்டின் வளர்ச்சிக் காக செலவழிக்க முடியாத கட்டத்தில் இப்போது நாங்கள் இருக்கிறோம். ஜனவரி 3-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் இருந்து இறுதித் தீர்ப்பு வரும்வரை எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியாத கட்டத்தில் கிரிக்கெட் வாரியம் இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அந்தவகையில் பார்த்தால் அணியின் கேப்டனான விராட் கோலியை ஐசிசியின் சிறந்த டெஸ்ட் அணியில் சேர்த்திருக்க வேண்டும். ஆனால் அவர் அலட்சி யப்படுத்தப்பட்டுள்ளார். அது வருத்தம் அளிக்கிறது இருப்பி னும் இந்த ஆண்டின் சிறந்த கிரிக் கெட் வீரராக இந்திய வீரர் அஸ்வினை, ஐசிசி தேர்ந்தெடுத்தி ருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு அனுராக் தாக்குர் கூறினார். -

SCROLL FOR NEXT