முகமது சிராஜ் | கோப்புப்படம் 
விளையாட்டு

IND vs NZ | சொந்த ஊரில் விக்கெட் வீழ்த்தி அசத்திய சிராஜ்: போட்டியை பார்க்க வந்த குடும்பத்தினர்

செய்திப்பிரிவு

ஹைதராபாத்: தனது சொந்த ஊரில் நடைபெற்று வரும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார் இந்திய பவுலர் முகமது சிராஜ். அவரது ஆட்டத்தை பார்க்க அவரது குடும்பத்தினரும் மைதானத்திற்கு வந்துள்ளனர்.

28 வயதான வலது கை வேகப்பந்து வீச்சாளரான சிராஜ், இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரர்களில் ஒருவாராக உள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் அபாரமாக பந்து வீசி விக்கெட் வீழ்த்தி வருகிறார். ஹைதராபாத் நகரை சேர்ந்தவர். தற்போது இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஹைதராபாத் நகரில்தான் நடைபெற்று வருகிறது.

உள்ளூர் வீரரான அவருக்கு ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு உள்ளது. அவர் பந்து வீச வரும் போதெல்லாம் ஊக்கம் கொடுத்து அசத்துகின்றனர். அதோடு இந்தப் போட்டியை நேரில் காண அவரது குடும்பத்தினரும் மைதானம் வந்துள்ளனர்.

இந்நிலையில், நியூஸிலாந்து வீரர் டெவான் கான்வேவின் விக்கெட்டை அவர் கைப்பற்றி இருந்தார். இரண்டாவது இன்னிங்ஸின் 6-வது ஓவரில் அந்த விக்கெட்டை சிராஜ் கைப்பற்றி இருந்தார். தனது சொந்த ஊரில் விக்கெட் கைப்பற்றிய மகிழ்ச்சியின் வெளிப்பாடு அவரது உடல் மொழியில் தெரிந்தது. இதுவரை 7 ஓவர்கள் வீசி 2 மெய்டன் உட்பட 29 ரன்களை கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி உள்ளார். அவரது இரண்டாவது விக்கெட் நியூஸிலாந்து அணியின் கேப்டன் டாம் லேதம்.

சிராஜ் குடும்பத்தினர்
SCROLL FOR NEXT