விளையாட்டு

லோதா குழு எங்களுக்கு அவகாசம் வழங்கவில்லை: அனுராக் தாக்குர் குற்றச்சாட்டு

பிடிஐ

லோதா குழுவின் சில பரிந்துரை களை நடைமுறைக்கு கொண்டு வருது சாத்தியமில்லை என வாரிய உறுப்பினர்கள் கருதுகின்ற னர். ஆனால் இதனை அவர் களுடன் கலந்துரையாடுவதற்கு கூட கடந்த 2 மாதங்களாக எங்களுக்கு போதிய அவகாசம் வழங்கப்படவில்லை என பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: தற்போது இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்றத்தின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

3 முதல் 4 பரிந்துரைகளையே வாரிய உறுப்பினர்கள் ஏற்க மறுக்கின்றனர். மேலும் இது நடைமுறைக்கு சரிவராது எனவும் அவர்கள் கருதுகின்றனர். இதற்கு தீர்வு காண அவகாசம் கேட்டோம். ஆனால் லோதா குழு கடந்த 2 மாதங்களாக எங்களுக்கு அவகாசம் கொடுக்கவில்லை.

லோதாகுழு பரிந்துரை களுக்கு முன்னதாகவே பிசிசிஐ அமைப்பில் நாங்கள் சீரமைப்பு களை மேற்கொண்டுள்ளோம். உலகின் சிறந்த அமைப்பாக பிசிசிஐ செயல்பட்டு வருகிறது. இந்திய அணி பல்வேறு தொடர் களில் சிறப்பாக விளையாடி வருகிறது.

டெஸ்ட் போட்டியில் நாம்தான் தற்போது நம்பர் ஒன் அணியாக உள்ளோம். டி 20ல் இரண்டாவது இடத்திலும், ஒருநாள் போட்டியில் 3-வது இடத்திலும் இந்திய அணி உள்ளது. எனவே குறைபாடு எங்கு உள்ளது என்பது தெரியவில்லை. தேவையில்லாமல் எங்களுக்கு நெருக்கடி உருவாக்கப்பட்டு வரு கிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை வென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். டெஸ்ட் தொடரில் இந்திய அணி, இங்கிலாந்தை மண்ணை கவ்வ செய்துள்ளது என்றார் அனுராக்.

SCROLL FOR NEXT