விளையாட்டு

கோவா அணியிடம் சென்னையின் எப்சி தோல்வி

செய்திப்பிரிவு

ஐஎஸ்எல் தொடரில் நேற்று கோவா வில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எப்சி - எப்சி கோவா அணிகள் மோதின. ஆட்டத் தின் 4-வது நிமிடத்தில் லால் ரின்ஜூ வாலா கோல் அடிக்க சென்னை அணி 1-0 என முன்னிலை பெற்றது. அடுத்த 2-வது நிமிடத்தில் கோவா வீரர் லூயிஸ் கோல் அடிக்க ஆட்டம் 1-1 என சமநிலை அடைந் தது. 14-வது நிமிடத்தில் கோவா வீரர் அர்னோலின் சுயகோல் அடிக்க சென்னை 2-1 என முன்னிலை பெற்றது.

21-வது நிமிடத்தில் கோவா அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோன்ஸாலெஸ் கோலாக மாற்ற ஆட்டம் 2-2 என சமநிலையை அடைந்தது. 28-வது நிமிடத்தில் டேனியல் உதவியுடன் ஒமக்பெமி கோல் அடிக்க முதல் பாதியில் சென்னை அணி 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியில் கோவா அடுத்தடுத்து இரு கோல்கள் அடித்தது. 68-வது நிமிடத்தில் டவோராவும், 76-வது நிமிடத்தில் லூயிஸூம் கோல் அடிக்க கோவா 4-3 என முன்னிலை பெற்றது. 88-வது நிமிடத்தில் சென்னை அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை ரிஸி கோலாக மாற்றினார். கடைசி நிமிடத்தில் டவோரா மீண்டும் ஒரு கோல் அடிக்க கோவா அணி 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த இரு அணிகளுமே அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கெனவே இழந்திருந்ததால் ஆட்டத்தின் முடிவு புள்ளிகள் பட்டியலில் எந்தவித தாக்கத் தையும் ஏற்படுத்தவில்லை.

SCROLL FOR NEXT