விளையாட்டு

மக்காவு ஓபன் பாட்மிண்டன்: 2-வது சுற்றில் சாய்னா

பிடிஐ

மக்காவு ஓபன் பாட்மிண்டன் ஆடவர் பிரிவில் இந்தியாவின் காஷ்யப்பும் மகளிர் பிரிவில் சாய்னா நெவாலும் 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

சீனாவின் மக்காவு நகரில் நடை பெற்று வரும் இந்தத் தொடரில் காமன்வெல்த் போட்டி சாம்பி யனான காஷ்யப் தனது முதல் சுற்றில் 21-19, 21-8 என்ற நேர் செட்டில் சீன தைபேவின் வெயி ஷெனை வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் சாய் பிரணீத் 21-12, 21-15 என்ற நேர் செட்டில் சீனாவின் பெஷி யாங்கை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஹாங்காங் ஓபனில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய இளம் வீரரான இந்தியாவின் சமீர் வர்மா 18-21, 13-21 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் முகமது பயு பங்கிஸ்துவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனு அட்ரி, சுமித் ரெட் ஜோடி 21-11, 17-21, 21-9 என்ற செட் கணக்கில் ஹாங்காங்கின் ஷான் ஆலன் யுன் லங், லி ஹூன் ஹான் ஜோடியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

மகளிர் பிரிவில் போட்டி தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள இந்தியாவின் சாய்னா நெவால் தனது முதல் சுற்றில் 21-23, 21-14, 21-18 என்ற செட் கணக்கில் போராடி இந்தோனேஷியாவின் ஹனா ரமாதினியை வீழ்த்தினார். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 3 நிமிடங்கள் நடைபெற்றது. 2-வது சுற்றில் இந்தோனேஷியாவின் தினார் டயா ஐஸ்டினுடன் மோது கிறார் சாய்னா.

SCROLL FOR NEXT